How To Protect Yourself

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் கொரானா சிகிச்சை நெறிமுறைகளுக்கு பாராட்டு

   டிஎன்எம் உறுப்பினர்களுக்கான ஆன்லைன் நிகழ்வில், ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ், அளவில்லாத சைட்டோகைன் உற்பத்தி மற்றும் தூண்டப்பட்ட இரத்த உறைவு ஆகியவை COVID-19 நோயாளிகளின் மரணத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் என்று கூறினார். COVID-19 நோயாளிகளுக்கு ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் டாக்டர் பி.வி.ரமேஷ் தமிழக அரசு மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் சிகிச்சை நெறிமுறைகளை பாராட்டி பேசினார்.


DR. P.V. Ramesh IAS

   ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆன்லைன் நிகழ்வில், மருத்துவரான டாக்டர் ரமேஷ் பேசும்போது, சைட்டோகைன் உற்பத்தி என்பது ஒரு நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் உடனடி நிகழ்வு ஆகும். ஆனால், இதன் விளைவாக ஏற்படும் அதிக காய்ச்சல், சுவாசக் கோளாறு மற்றும் திடீரென ஏற்படும் நுரையீரல் கோளாறு போன்றவை நோயாளிக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றார்.


    'நம்மை கொரோனா வைரஸ் தாக்கும்போது, நமது உடலில் அளவுக்கு அதிகமான லிம்போசைட்டுகள் (நோயெதிர்ப்பு இரத்த வெள்ளை செல்கள்) நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது. பொதுவாக இது நடக்காது. பெரும்பாலும் ஏதேனும் ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு எதிரான ஆன்டிபாடி உருவாக்கப்படும். ஆனால், COVID-19 -இல் அவ்வாறில்லாமல், நோயெதிர்ப்பு லிம்போசைட்டுகள் எண்ணிக்கை திடீரென உயர்கின்றன. இது நமது உடல் திரவங்களை நுரையீரலில் குவிக்கிறது. இது வைரஸுக்கு எதிரான நடவடிக்கை என்றாலும் நோயாளிக்கும் பாதகமான விளைவை உண்டாக்கும். நுரையீரலில் திடீரென பெருகும் உடல் திரவங்களின் அளவு, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி மரணம் சம்பவிக்கிறது,' என்று டாக்டர் ரமேஷ் விளக்கினார்.

    கொரோனா நோயாளிகளின் அதிகரிக்கும் இறப்புக்கு மற்றொரு காரணமாக, டாக்டர் ரமேஷ் சுட்டிக்காட்டுவது அதிகரித்த இரத்தம் உறைதல் ஆகும். 'இரத்தக் குழாய்களில் அதிகப்படியான இரத்த ஓட்டம் மற்றும் உறைதல் ஏற்படுகின்றன,' என்றும் கூறினார். COVID-19 இன் தீவிர பாதிப்புகளில், இன்குபேட்டர் மற்றும் வேண்டிலேட்டர்களும் பயன்தராத சூழ்நிலையை விவரித்தார். ஆனால், இந்நிலையிலும் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசு மற்றும் வேலூர் சிஎம்சியைப் பாராட்டினார்.

   'தமிழ்நாடு மற்றும் வேலூர் சிஎம்சி கடைப்பிடித்த வழிமுறைகளை ஆந்திராவிலும் கடைபிடிக்க ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு விவேகமான நெறிமுறையாக நான் நினைக்கிறேன், ஸ்டீராய்டுகள் மற்றும் குறைந்த அளவிலான இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிப்பது உண்மையில் பயனளிக்கிறது,' என்று அவர் கூறினார், 'எனது சொந்த நம்பிக்கை என்னவெனில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் கொடுப்பதை விட இது நாம் பின்பற்றவேண்டிய வழி முறையாக உள்ளது. இது ஒரு யானையை கொல்ல ஒரு மனிதனை அனுப்புவது போதுமானது போன்றதாகும்'.


    டாக்டர் ரமேஷ் டிஎன்எம்மிடம் பேசும்போது, தமிழக அரசு மற்றும் சிஎம்சியின் சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்ற ஆந்திர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறினார். 'நோய்த்தொற்று பரவும் இயல்பில் இருந்து , சிஎம்சி உருவாக்கிய நெறிமுறைகள் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சரியான நிர்வாகத்தின் மிகவும் பொருத்தமான போக்காகும். ஆனால். ஆந்திராவில் மிகவும் சிக்கலான ஒரு நிலை நிலவுகிறது. மேற்கண்ட நெறிமுறைகளைப் பின்பற்ற பரிந்துரைத்துள்ளேன். இருப்பினும், ஐசிஎம்ஆர் பல மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் பல மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, மருந்துகளின் தேர்வு என்பது சிகிச்சையளிக்கும் மருத்துவரின் முடிவுமாகும். எனவே, இந்த நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஆந்திரா இன்னும் சில வழிகளைத் தாண்ட வேண்டியுள்ளது.' என்றார்.

    கடுமையான அறிகுறிகளுடன் கூடிய COVID-19 நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் அஸித்ரோமைசினுடன் சேர்த்து மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) - வைக் கொடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கடந்த மார்ச் மாதம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை மருத்துவ சுகாதார நிபுணர்களால் அதன் ஆபத்தான பக்க விளைவுகளை முன்னிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜூன் 13 அன்று, ஐசிஎம்ஆர் அதன் வழிகாட்டுதல்களைத் திருத்திய ஐசிஎம் ஆர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கான சான்றுகள் 'குறைவாகவே உள்ளன' என்றும் நோயாளியுடன் கலந்தாலோசித்து மருந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியது.


    வேலூர் சிஎம்சியின் இயக்குனர் டாக்டர் ஜே.வி. பீட்டர், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான நெறிமுறைகளைப் பற்றி டிஎன்எம் உடன் பேசினார். அதில், 'ஒவ்வொரு வாரமும் ஒரு மருத்துவ நிர்வாக குழு SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் நோய் குறித்த அனைத்து சமீபத்திய புதிய தகவல்கள், வெளியீடுகள், சிகிச்சை முறைகள், முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்கிறது,' என்று கூறினார். இதன் அடிப்படையில், அக்குழு COVID-19 நோயாளிகளுக்கு அவர்களின் லேசான, மிதமான மற்றும் கடுமையான அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சையளிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைக் கொண்டு வருகிறது.

டாக்டர் ஜே.வி. பீட்டர்

இயக்குனர், சிஎம்சி வேலூர்

     'ஒவ்வொரு பிரிவிற்கும் வந்துள்ள அனைத்து புதிய ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில், சிகிச்சை நெறிமுறைகள் வாரந்தோறும் புதுப்பிக்கப்படுகிறது,' என்று டாக்டர் பீட்டர் கூறினார். சிகிச்சையைப் பொறுத்தவரை, சிஎம்சி இயக்குனர் கூறும்போது, 'இந்த நேரத்தில், உலகளவில் வரும் பல அறிக்கைகளின் அடிப்படையில் ஸ்டீராய்டுகள் சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஓரளவு உறைதல், ஆக்ஸிஜன் சிகிச்சை மற்றும் புரோனிங் (நோயாளிகள் தங்கள் வயிற்றில் அல்லது பக்கத்தில் படுத்துக் கொள்வது) வேலை செய்வதாகத் தெரிகிறது. மற்ற எல்லா சிகிச்சையிலும் அவர்கள் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையைப் பொறுத்து அதன் பயன்பாடு அமைகிறது. ஏனெனில் அவற்றின் மீதான ஆதாரங்களின் தரம் வலுவாக இல்லை. '

    அஸித்ரோமைசினுடன் இணைந்து HCQ குறிப்பிட்ட நோயாளிகளுக்கு கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று டாக்டர் பீட்டர் கூறினார். 'இது நோயுற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு சிகிச்சையளிக்கும் மருத்துவரின் முடிவாகும். இந்த நேரத்தில், தற்போது கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பெரும்பாலான சிகிச்சை மையங்களில் HCQ பயன்படுத்தப்படவில்லை. '


    17 பேர் கொண்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழகம் இந்தச் சிகிச்சை நெறிமுறையை ஏற்றுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, கடுமையான நோயாளிகளுக்கான சிகிச்சை நெறிமுறையில் நோயாளிகள் குப்புறப்படுத்து தூங்கச் சொல்வது (வயிறு பகுதி அடிப்புரமாக இருக்குமாறு), அதிக ஆக்ஸிஜன் ஓட்டம், ஸ்டீராய்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம் பெருமைப்படுகிறது!



Post a Comment

0 Comments