அச்சுறுத்தும் கொரானா - பாதுகாப்பாக இருப்பது எப்படி?
உலக நாடுகளிலிருந்து தற்போது இந்தியாவிலும் நுழைந்து விட்டது கொரோனா. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் சிலருக்குத் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விளக்கமாக இந்த பகுதியில் பார்க்கலாம்.
கொரோனா அச்சம்
பாம்பின் இறைச்சியில் இருந்து பரவியது தான் இந்த கெரோனா வைரஸ். சீனாவில் பரவிய இந்த வைரஸ் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி தற்போது இந்தியாவுக்கும் பெரிய அச்சுறுது்தலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சீனாவும் தொடர்ந்து உலக நாடுகளுக்குக் குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
கொரோனா தாக்கம்
சீனாவில் மட்டும் 2750 பேரை தாக்கியிருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். அதோடு பல உயிர்களையும் இந்த வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. இந்த கொரோனா வைரஸ், இந்தியாவிற்குள் வந்துவிடாமல் இருபபதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தாலும் கூட, இந்தியாவைத் தாக்கும் அபாயம் மிக அதிகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் மேலாக இந்த வைரஸ் தொற்று பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனையும் மருத்துவ முகாம்களும் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனா
இப்படி உலகையே திகிலூட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவாமல் இருப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுத்துக் கொண்டிருந்தாலும் ராஜஸ்தானில் ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மிகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இளைஞனின் குடும்பத்தாருக்கும் தீவிர பரிசோதனை செய்ய உத்தவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடும் பாதுகாப்பு முறைகளைத் தெரிந்து வைத்திருக்கும்படியும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நம்மை வலியுறுத்துகிறது.
எப்படி கண்டறிவது?
சில ஆரம்ப கால அறிகுறிகளை வைத்து கொரோனா வைரஸ் தொற்றை அறிந்து கொள்ள இயலும்.
மூக்கு ஒழுகுதல் (சாதாரண சளி என நினைக்க வேண்டாம்)
தீராத தலைவலி
வறட்டு இருமல்
சுவாசக் கோளாறு
தொண்டை கரகரப்பு
மூச்சுவிட சிரமப்படுதல்
காய்ச்சல்
உடல் சோர்வாக இருப்பது
ஆகிய அறிகுறிகள் தான் ஆரம்ப காலத்தில் இருக்கும். பருவ மாற்றத்தால் ஏற்படும் சாதாரண பிரச்சினை என்று நினைத்து விட்டுடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்வது நல்லது.
ஏற்படும் பாதிப்புகள்
மனிதர்களுக்குப் பரவக் கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.
தொண்டையில் கடுமையான வலியை உண்டாக்கும். மார்புப் பகுதியில் லேசான வலி கூட சிலருக்கு இருக்கும். உடலை பலவீனப்படுத்தும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்யும்.
பரவும் முறைகள்
எப்படியெல்லாம் பரவும் என்று பார்க்கலாம்.
இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடமி இருந்து மற்றவருக்குப் பரவும்.
நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.
வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும். கண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும்.
மலக்கழிவுகளின் வாயிலாகவும் பரவும். இது மற்ற பரவும் முறைகளக் காட்டிலும் மிகக் குறைவாக அளவே இருக்கிறது.
பாதுகாப்பு முறையும் சிகிச்சை முறையும்
அடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள்.
கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.
உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
ஒருவேளை தொற்று பரவிவிட்டால்...
நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.
சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு என்று தனியே குறிப்பிட்ட மருத்துவ முறைகள் ஏதும் கிடையாது. நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.
வராமல் காப்பது எப்படி?
இந்தியாவில் புதிதாக பரவும் அரிய வகை பறவைக்காய்ச்சல்... எப்படியெல்லாம் பரவுகிறது?...வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளாக இருந்தால் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தவிர்த்து விடுங்கள்.
நீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
லேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.
0 Comments