How To Protect Yourself

கொரானாவை கண்டு இனி பயம் வேண்டாம் -இதை மட்டும் வீட்டில் ட்ரை பண்ணுங்க ....

கொரானாவை கண்டு இனி பயம் வேண்டாம் -இதை மட்டும் வீட்டில் ட்ரை பண்ணுங்க ....







  உலகம் முழுவதும் அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ளது கொரோனா எனும் தொற்று நோய். இந்நோய் பரவலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை!! இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!


   குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் நோய்க்கு நேரடி தடுப்பு மருந்து எதுவும் தற்போது வரையில் கண்டறியப்படாத நிலையில் அந்நோயின் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்கள் முன் வைத்து வருகின்றன.

குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்

  கொரோனா நோயிலிருந்து எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் முதியவர்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவற்றில் சில குறிப்புகளை இங்கே காணலாம்

சளி, இருமல்

   பொதுவாகவே, குழந்தைகளுக்கு சளி, இருமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தற்போதைய சூழலில் அது வழக்கமான ஒன்றா அல்லது கொரோனா போன்ற பாதிப்பா என கண்டறிவது கடினமான ஒன்றாகும். சாதாரண காய்ச்சலுக்கும் கொரோனாவிற்கும் வித்தியாசத்தை உடனே அறிவது சற்று கடினம். அதே சமயம் குழந்தை ஒரே நாளில் சோர்வாகி விடுகிறதா என்பதைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

மருத்துவரை அணுக வேண்டும்

   குழந்தைகளுக்குச் சளி, இருமல், காய்ச்சலுடன் உடலில் தசை வலி உள்ளிட்டவையும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது நல்லது. இதுபோன்ற அறிகுறி இருப்பின் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தனிமைப் படுத்துங்கள் 

   ஒருவேலை கொரோனா தொற்றுநோய்க்கு உண்டான அறிகுறி தென்பட்டால் முதலில் தனிமைப்படுத்துவது கட்டாயமாகும். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குறைந்தது 14 முதல் 28 நாட்கள் வரை தனிமையில் இருக்க வேண்டும்.

சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்

   கொரோனா போன்ற நோய்களிலிருந்து முன்னதாகவே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சுகாதாரத்தை உறுதி செய்தல். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க நல்ல சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். கண்கள், வாய், மூக்கு போன்றவற்றை உங்களின் சுத்தம் செய்யப்படாத கைகளுடன் தொடக்கூடாது. இதனை குழந்தைகள் செய்வதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.




குழந்தைகளுக்கான பாதுகாப்பு


      ஒருவருக்கொருவர் கை குலுக்குவதன் மூலம்தான் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுகிறது. எனவே எந்த காரணத்திற்காகவும் பிறறிடம் கை குலுக்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் கை குலுக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு இதனை அடிக்கடி சொல்லிக்கொடுப்பது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானதாகும்.

டயப்பர் மற்றும் மருந்துகளைச் சேமிக்கவும்


      நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பெருமளவில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு வருகின்றன. இதனால், முன்கூட்டியே ஒரு மாதத்திற்கு குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான டயப்பர்கள், அடிப்படை மருந்துகள், பெரியவர்களுக்குத் தேவையான மருந்துகள், இன்ஹேலர்கள் போன்றவற்றை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

காலணிகளை வெளியே விடுங்கள்

      பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரது காலணிகளும் வீட்டின் வெளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலமாக கொரோனா போன்ற வைரஸ் எளிதில் நம்மைத் தாக்கி விடும்.

சுத்தமான உடை


          பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வேலை, பள்ளி என வீட்டை விட்டு வெளியில் சென்று வந்தவுடன் அணிந்திருக்கும் உடையை மாற்றி விடுவது நல்லது. அந்த உடையின் மூலமாகவும் வைரஸ் நம் வீட்டின் உள்ளே நுழையலாம். குழந்தைகள் வந்தவுடன் எவ்வளவு விரைவில் உடைகளை மாற்றிக்கொள்கிறார்களோ அவர்களுக்கு அவ்வளவு நல்லது

மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும்

          நோய் கட்டுப்பாட்டு மைய அறிக்கையின் படி கொரோனா வைரசானது பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு, தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் பரவும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூட்டம் இருக்குமிடங்களில் இது வேகமாகவும், எளிதாகவும் பரவும் தன்மை கொண்டது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சத்தான உணவுகள்

         குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளைக் கொடுங்கள். குறிப்பாக, கீரை வகைகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகளை அடிக்கடி கொடுங்கள். அதோடு, வீட்டிலிருந்தே விளையாடுதல், உடற்பயிற்சி போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள். இதுபோன்ற காரணிகளின் மூலம் நாம் கொரோனா போன்ற நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

Post a Comment

0 Comments